தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பணமோசடி வழக்கு; அமலாக்கத்துறை அறிக்கையால் பினராயி மகள் வீணாவுக்கு சிக்கல்

பணமோசடி வழக்கு; அமலாக்கத்துறை அறிக்கையால் பினராயி மகள் வீணாவுக்கு சிக்கல்

பணமோசடி வழக்கு; அமலாக்கத்துறை அறிக்கையால் பினராயி மகள் வீணாவுக்கு சிக்கல்


UPDATED : ஜூலை 25, 2026 08:28 PM

ADDED : ஜூலை 25, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2026 08:28 PM ADDED : ஜூலை 25, 2026 07:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சி: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுடனான தனிப்பட்ட நட்புறவு காரணமாகவே, எந்த சேவையும் பெறாமல் அவரது மகள் வீணாவுக்கு 2.78 கோடி ரூபாய் வழங்கியதாக சி.எம்.ஆர்.எல்., நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான சசிதரன் கர்தா, அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், 2016 - 26 வரை, 10 ஆண்டுகள் கேரள முதல்வராக பதவி வகித்தார். 2018 -- 19 காலகட்டத்தில், சி.எம்.ஆர்.எல்., எனப்படும், 'கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட்' என்ற நிறுவனம், பினராயி விஜயன் மகள் வீணாவின், 'எக்சலாஜிக் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்திற்கு 2.78 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் செலுத்தியது. அந்நிறுவனத்திற்கு எந்த சேவையையும் வழங்காத நிலையில், பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், 2024ல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் தீர்ப்பாயத்தில், அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், 'சி.எம்.ஆர்.எல்., நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான சசிதரன் கர்தா, அப்போதைய முதல்வர் பினராயி விஜயனுடன் இருந்த தனிப்பட்ட உறவு காரணமாக அவரது மகள் வீணாவுக்கு எந்த சேவைகளும் பெறாமல் 2.78 கோடி ரூபாய் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்' என, சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல் வீணா விஜயனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட அவரது ஐபோன், சிவப்பு நிற டைரி உள்ளிட்டவை, இந்த வழக்கில் முக்கிய டிஜிட்டல் சான்றுகளாக அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே எந்த சேவைகளும் வழங்காமல், போலி ரசீதுகள் உருவாக்கப்பட்டு பண பரிமாற்றம் நடந்ததை இந்த டிஜிட்டல் சான்று தரவுகள் உறுதிப்படுத்துகிறது என, அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையைக் கொண்டு வாங்கப்பட்ட அல்லது முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்கும் நோக்கில் அமலாக்கத்துறை சார்பில் தீர்ப்பாயத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us