ADDED : ஜன 18, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகன்னடா: ஷிவமொகாவில், குரங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து, உத்தரகன்னடாவில் குரங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
கர்நாடகாவில் உருமாறிய கொரோனா தொற்று, டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதற்கிடையே குரங்கு காய்ச்சல் பரவுவதால், சுகாதாரத்துறை நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஷிவமொகா, ஹொசநகரின், கிராமம் ஒன்றில் 18 வயது இளம்பெண், குரங்கு காய்ச்சலுக்கு பலியானார்.
இந்நிலையில் உத்தர கன்னடா, சித்தாபுராவில் வசிக்கும் 40 வயது நபர், சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். குடும்பத்தினர் இவரை மணிப்பால் மருத்துவமனையில் சேர்த்தனர். இவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது, குரங்கு காய்ச்சல் உறுதியானது.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.