கேரளாவில் தொடர்ந்து கொட்டும் பருவமழை: நாளை மூன்று மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்"
கேரளாவில் தொடர்ந்து கொட்டும் பருவமழை: நாளை மூன்று மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்"
UPDATED : மே 27, 2025 03:17 PM
ADDED : மே 26, 2025 07:04 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் நிலையில் நாளை (மே 27) 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ரெட் அலர்ட்
பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை மீட்டனர். கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்
அதேபோல், திருச்சூர், மலப்புரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
மலப்புரம், வயநாடு மற்றும் கோட்டயம் மாவட்ட கலெக்டர்கள் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். மீனவர்கள் மற்றும் கடலோரத்தில் வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பெரியாறு மற்றும் முத்திரபுழையாறு ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அஞ்சங்கடி சந்தி, மாலூட்டி சந்தி, மூசா வீதி, வெளிச்சென்ன பாடி ஆகிய இடங்களில் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.