ADDED : ஜூன் 22, 2025 09:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து, சண்டிகர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் சுரிந்தர் பால் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பருவமழை துவங்கியுள்ளது. மாநிலம் முழுதும் விரைவில் மழை பெய்யத் துவங்கும். சண்டிகர் உட்பட ஹரியானாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.