sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிராமப்புற குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு; நபார்டு வங்கி ஆய்வில் தகவல்

/

கிராமப்புற குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு; நபார்டு வங்கி ஆய்வில் தகவல்

கிராமப்புற குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு; நபார்டு வங்கி ஆய்வில் தகவல்

கிராமப்புற குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு; நபார்டு வங்கி ஆய்வில் தகவல்

2


ADDED : அக் 10, 2024 10:01 PM

Google News

ADDED : அக் 10, 2024 10:01 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வருமானம் 57.6 சதவீதம் அதிகரித்து உள்ளது நபார்டு வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நபார்டு நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2015-17 ல் கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பத்தினரின் சராசரி மாத வருமானம் ரூ.8,059 ஆக இருந்தது. இது 2021-22ம் ஆண்டில் ரூ .12,698 ஆக அதிகரித்து உள்ளது. இது 57.6 சதவீதம் உயர்வு ஆகும்.

இதேகாலகட்டத்தில் சேமிப்பும் ரூ.9,104 ல் இருந்து ரூ.13,209 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விகிதமும் 5 ஆண்டுகளில், 50.6 சதவீதத்தில் இருந்து 66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், குடும்பத்தினரின் கடனும் 47.4 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பத்தினரில் யாரேனும் ஒருவர் காப்பீடு எடுத்து கொள்வது என்பது 2016 -17 காலகட்டத்தில் 25.5 சதவீதமாக இருந்தது. இதுவே 2021-22 ல் 80.3 சதவீதமாக ஆனது.

வரவுக்கு ஏற்றார் போல் செலவும் அதிகரித்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2016 -17 ல் குடும்பங்களுக்கு ரூ.6.646 செலவான நிலையில், தற்போது இது ரூ.11,262 ஆக அதிகரித்துள்ளது. உணவுக்கு செலவிடும் தொகையானது 51 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us