ADDED : நவ 15, 2025 12:15 AM

புதுடில்லி: பீஹாரில் நேற்று நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், கடந்த 2020ல், கிடைத்ததை விட கூடுதல் ஓட்டுகள் 'நோட்டா'வுக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில், 'நோட்டா' எனப்படும், 'மேற்கண்ட யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என, 1.81 சதவீதம் பேர் ஓட்டளித்து இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷன் பகிர்ந்த தரவில் இடம்பெற்றுள்ளதாவது:
பீஹார் சட்டசபை தேர்தலில், 6,65,870 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். இது 1.81 சதவீதமாகும்.
முன்னதாக, 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், 7,06,252 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்திருந்தனர். இது அப்போது பதிவான ஓட்டுகளில், 1.68 சதவீதம்.
சதவீத அடிப்படையில் பார்த்தால், முந்தைய தேர்தலை விட, 0.13 சதவீதம் அதிகம். அதே நேரத்தில், 2015ல், 3.8 கோடி பேர் ஓட்டளித்த நிலையில், 9.4 லட்சம் பேர் நோட்டாவில் பதிவு செய்திருந்தனர்.
இது, 2.48 சதவீதம். 2015 தேர்தலை ஒப்பிடுகையில், தற்போதைய நோட்டா ஓட்டுகள் மிக குறைவு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

