ஊழல் தடுப்பு சட்டம் மிகவும் அவசியம்: இது முக்கியமான விஷயம் என்கிறார் கிரண் ரிஜிஜூ
ஊழல் தடுப்பு சட்டம் மிகவும் அவசியம்: இது முக்கியமான விஷயம் என்கிறார் கிரண் ரிஜிஜூ
ADDED : ஆக 30, 2025 08:27 AM

புதுடில்லி: ''ஊழல் தடுப்பு சட்டம் மிகவும் அவசியமானது. ஒவ்வொரு இந்தியருக்கும் இது மிகவும் முக்கியமான விஷயம்'' என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
பிரதமர், முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யலாம் என கடந்த வாரம் லோக்சபாவில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு, கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி:
கடுமையான வழக்குகளில் 30 நாட்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்ட ஊழல் தலைவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்டம் மிகவும் அவசியமானது. ஊழலுக்கு எதிரான சீர்திருத்தச் சட்டம் இதுவாகும். இது மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டு பார்லிமென்ட் குழுவிற்கும் அனுப்பப்பட்டது. இது ஒரு மிக முக்கியமான சட்டம்.
இதில் அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படுகிறது, இதில் தற்போதைய முதல்வர், மத்திய அமைச்சர் மற்றும் பிரதமர் கூட சட்டத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். இதன் மூலம், நீங்கள் ஊழல் செய்தால், நீங்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் பதவியையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிக முக்கியமான விஷயம். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

