ADDED : மார் 19, 2024 11:04 PM
சித்ரதுர்கா : தீயில் தள்ளி இரண்டு ஆண் குழந்தைகளைக் கொன்று, தானும் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரதுர்காவின் செல்லகெரே மல்லசமுத்ரா கிராமத்தில் வசித்தவர் மாரக்கா, 24. இவருக்கு நயன், 4, ஹர்ஷவர்தன், 2, என்ற இரு ஆண் குழந்தைகள் இருந்தனர்.
நேற்று மதியம் மகன்கள் இருவரையும், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற மாரக்கா, மரங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென பரவியதும், இரண்டு குழந்தைகளையும் பிடித்து தீயில் தள்ளினார்.
பின்னர் அவரும் தீயில் குதித்தார். இதில் மூன்று பேரின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் அலறினர். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
ஆனாலும் தாயும், குழந்தைகளும் உடல்கருகி இறந்தனர். மாரக்காவின் விபரீத முடிவுக்கு காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

