ADDED : நவ 13, 2024 09:49 PM
துமகூரு; கணவருடன் ஏற்பட்ட தகராறில், 3 வயது மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
துமகூரின் துருவகெரே டப்பேகட்டா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ்.இவரது மனைவி சசிகலா, 37. இந்த தம்பதிக்கு,15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கோகுல் என்று பெயர் வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பசவராஜ்தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தார்.அக்கம் பக்கத்தினர், அவரை சமாதானம் செய்தனர். கடந்த 10ம் தேதி இரவும் இதுபோல தகராறு நடந்தது.
இதையடுத்து, சசிகலா, மகனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பின் அவரை பற்றி எந்ததகவலும் இல்லை.
சசிகலாவை கண்டுபிடித்து தரும்படி அவரது சகோதரர் ரேணுகாப்பா, போலீசில் புகார் செய்தார்.
நேற்று முன்தினம் இரவு துருவகெரே டவுனில் உள்ள ஏரியில் தாயும், மகனும் பிணமாக மிதந்தனர்.
மகனுடன், ஏரியில் குதித்து தற்கொலைசெய்தது தெரிந்தது.
இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

