மாமியார், மருமகள் கூட்டு பலாத்காரம்; ஆந்திராவில் பயங்கரம்
மாமியார், மருமகள் கூட்டு பலாத்காரம்; ஆந்திராவில் பயங்கரம்
ADDED : அக் 12, 2024 10:12 PM

ஐதராபாத்: ஆந்திராவில் குடும்பத்தினரை தாக்கி விட்டு மாமியாரையும், மருமகளையும் அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் தனியார் பேப்பர் மில் ஒன்றின் கட்டுமானம் நடந்து வருகிறது. வயதான தம்பதி ஒன்று, தனது மகன், மருமகளுடன் அங்கேயே தங்கியிருந்து காவலாளி பணியை பார்த்து வருகின்றனர். இந்த சூழலில், அவர்களின் வீட்டின் முன்பு 5 பேர் கொண்ட கும்பல் கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த அந்த முதியவர், அவர்களை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த கும்பல் அவரரையும், தட்டிக் கேட்க வந்த அவரது மகனையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், முதியவரின் வீட்டை சேதப்படுத்தி அந்தக் கும்பல், உள்ளே இருந்த மாமியார் மற்றும் மருமகளை பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர்.
இதனால், நிலைகுலைந்து போன அந்தக் குடும்பத்தினர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் மாமியார் மற்றும் மருமகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

