sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

எம்.பி., சுரேஷ் கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பு

/

எம்.பி., சுரேஷ் கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பு

எம்.பி., சுரேஷ் கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பு

எம்.பி., சுரேஷ் கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பு

ADDED : பிப் 03, 2024 11:06 PM

Google News

ADDED : பிப் 03, 2024 11:06 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தென் மாநிலங்களை தனி நாடாக்க வேண்டும் என்று கேட்கும் சூழ்நிலை ஏற்படும்' என கூறிய, காங்கிரஸ் எம்.பி., சுரேஷுக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்து உள்ளது.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும், அற்புதமான நாடு. இங்கு பல மொழி பேசும் மக்கள் உள்ளனர். அவர்களின் கலாசாரம், பண்பாடு வேறு மாதிரியாக இருக்கலாம்.

ஆனால் இந்தியர்கள் என்று வந்துவிட்டால், அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து விடுகிறார்கள். இந்தியராக பிறப்பதற்கே ஒரு பெருமை வேண்டும். 'பாரத் மாதாக கீ ஜே' என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல; அது ஒவ்வொரு இந்தியனின் உணர்வு.

தேசப்பற்று, இறையாண்மை, அன்பு, சகோதரத்துவம், சகிப்புதன்மை என்று எல்லாவற்றையும் காட்டுவதால், இந்தியாவில் வாழும் 144 கோடியே 18 லட்சம் பேருக்கு, பாரத மாதாவின் ஆசி கிடைக்கிறது. மூவர்ணக் கொடி கையில் ஏந்தி, நான் இந்தியன் என்று சொல்வதில் இருக்கும் கம்பீரம், கர்வம் வேறு எங்கு கிடைத்துவிடும்.

இந்தியராக பிறப்பதற்கே ஒரே வரம் வேண்டும். ஒரு காலத்தில் எங்கேயோ இருந்த, இந்தியா இன்று உலக அளவில் முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளுக்கே, நமது தயவு தேவை என்ற நிலை வந்துவிட்டது. மற்ற நாடுகளுக்குச் சென்றால், இந்தியர்களுக்கு தனி மரியாதை, கவுரவம் கிடைக்கிறது.

சிவப்பு கம்பளம்

இந்தியர்கள் நமது நாட்டிற்கு வர மாட்டார்களா என்று, ஒவ்வொரு நாட்டினரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்தியர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

ராயண்ணா பிறந்த மண்

இப்படி இருக்கும் சூழ்நிலையில், நம் நாட்டின் சுதந்திரத்திற்கு நாங்கள் தான் பாடுபட்டோம் என்று கூறும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒருவர், இந்தியாவை இரண்டாக பிரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று கூறி, நாட்டு மக்களிடையே அதிர்வலைகளை கிளப்பி உள்ளார்.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, சுதந்திர போராட்ட வீரர்களில் கர்நாடகாவின் கித்துார் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். அவர்கள் பிறந்த மண்ணில் இருக்கும் எம்.பி.,யின் வாயில் இருந்து, இந்தியாவை பிரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறி இருப்பது, நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதது.

அந்த நபர், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் தான். மத்திய அரசிடம் இருந்து கர்நாடகாவுக்கு மானியம் கிடைக்கவில்லை என்று கூறியவர், இந்த நிலை தொடர்ந்தால், தென் மாநிலங்களை தனி நாடாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறி உள்ளார்.

அவரது கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. பார்லிமென்ட், ராஜ்யசபாவிலும் இந்த பிரச்னை எதிரொலித்து உள்ளது.

எம்.பி., சுரேஷ் கூறியது பற்றி பல்வேறு கட்சியினர் அளித்த கருத்து:

ஒற்றுமை

வெளிப்படுத்தும் நாடு

எம்.பி., சுரேஷ் கூறியது கண்டிக்கத்தக்கது. இப்படி கூறி தேச துரோக செயலில் ஈடுபட்டு உள்ளார். மானியம் தரவில்லை என்றால், அதை பற்றி மட்டுமே பேச வேண்டும். தனி நாடு என்று பேசக் கூடாது. இந்தியா என்றால் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நாடு. எம்.பி., கருத்து ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, நாடே மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், தனி நாடு என்று சுரேஷ் பேசியது, நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகங்கள் பரபரப்புக்காக...

நாடு பிரிப்பு என்று, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கூறியதை, அவரது கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டை கண்டிப்பாக பிரிக்க முடியாது. பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள் இருப்பது தான், இந்தியாவின் பலமே. மாநிலங்களை தனி நாடாக பிரித்தாலும், பலமே இல்லாமல் போய்விடும். தன்னை பற்றி ஊடகங்கள் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக, நாடு பிரிப்பு என்று சுரேஷ் பேசி உள்ளார். கர்நாடகாவை 2 ஆக பிரித்து, வடமாவட்டங்களுக்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இப்போது நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று பேச்சு அடிடுகிறது.

பிரச்னைக்கு தீர்வு ஆகாது

இந்தியா என்பது ஒரு நாடு தான். எக்காரணம் கொண்டும் தனி நாடு கேட்கவே கூடாது. எம்.பி., சுரேஷ் தனி நாடு கேட்டதை கண்டிக்கிறேன். இந்தியாவில் ஏற்கனவே நிறைய மக்கள் பிரச்னைகள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தொடர்பான பிரச்னைகளில், கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தேவையில்லாதவற்றை அரசியல்வாதிகள் பேசுவதை நிறுத்த வேண்டும். மொழி, இனம், பாராம்பரியம், கலாசாரம் மாறுபடலாம். இந்தியர்கள் என்பது எப்போம் மாறாது. தனி நாடு கேட்பது எப்போதும் பிரச்னைக்கு தீர்வு ஆகாது.

பிரித்தாளும் கொள்கை

நாட்டை பிரிக்க வேண்டும் என்பது தான், காங்கிரசின் கொள்கை. எம்.பி., சுரேஷுன் கருத்தால் உறுதியாகி உள்ளது. எம்.பி.,யாக இருப்பவருக்கு எப்படி பேச வேண்டும் என்று, முதலில் தெரிய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்தியாவை வளர்ச்சி அடைய வைக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்தியாவை உடைக்க நினைக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு இருந்து தற்போது வரை, காங்கிரஸ் பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அடுத்த தேர்தலில் சுரேஷ் தோற்பது உறுதி.

நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் பல்வேறு வகையான பயங்கரவாதிகள் உள்ளனர் என்பதை, காங்கிரஸ் எம்.பி., சுரேஷுன் கருத்து நிரூபித்து உள்ளது. ஒற்றுமைக்காக பாதயாத்திரை செல்கிறேன் என்று, ராகுல் கூறினால், அவரது கட்சி எம்.பி., நாட்டை பிரிக்க வேண்டும் என்கிறார். காங்கிரசில் ஒவ்வொருவருக்கும் ஒரு மனப்பான்மை உள்ளது. அவர்கள் பேசுவதை நம்பவே முடியாது. நாட்டை பிரிக்க வேண்டும் என்ற, மனநிலை கொண்டவர்கள் அரசியலில் தொடரவே கூடாது. சுரேஷ் இனி தேர்தலில் நிற்காத மாதிரி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதற்கு முறையான சட்டம் கொண்டு வர வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் பல்வேறு வகையான பயங்கரவாதிகள் உள்ளனர் என்பதை, காங்கிரஸ் எம்.பி., சுரேஷுன் கருத்து நிரூபித்து உள்ளது. நாட்டின் ஒற்றுமைக்காக பாதயாத்திரை செல்கிறேன் என்று, ராகுல் கூறினால், அவரது கட்சி எம்.பி., நாட்டை பிரிக்க வேண்டும் என்கிறார். காங்கிரசில் ஒவ்வொருவருக்கும் ஒரு மனப்பான்மை உள்ளது. அவர்கள் பேசுவதை நம்பவே முடியாது. நாட்டை பிரிக்க வேண்டும் என்ற, மனநிலை கொண்டவர்கள் அரசியலில் தொடரவே கூடாது. சுரேஷ் இனி தேர்தலில் நிற்காத மாதிரி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதற்கு முறையான சட்டம் கொண்டு வர வேண்டும்.

- அக் ஷய் ராய் தம்பேகனா,

இளைஞர் அணி உறுப்பினர்

கர்நாடகா பா.ஜ.,

பிரித்தாளும் கொள்கை

நாட்டை பிரிக்க வேண்டும் என்பது தான், காங்கிரசின் கொள்கை. எம்.பி., சுரேஷுன் கருத்தால் உறுதியாகி உள்ளது. எம்.பி.,யாக இருப்பவருக்கு எப்படி பேச வேண்டும் என்று, முதலில் தெரிய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்தியாவை வளர்ச்சி அடைய வைக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்தியாவை உடைக்க நினைக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு இருந்து தற்போது வரை, காங்கிரஸ் பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அடுத்த தேர்தலில் சுரேஷ் தோற்பது உறுதி.

- ஜெயதேவா,

பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலர்,

கர்நாடகா பா.ஜ.,

ஊடகங்கள் பரபரப்புக்காக...

நாடு பிரிப்பு என்று, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கூறியதை, அவரது கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டை கண்டிப்பாக பிரிக்க முடியாது. பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள் இருப்பது தான், இந்தியாவின் பலமே. மாநிலங்களை தனி நாடாக பிரித்தாலும், பலமே இல்லாமல் போய்விடும். தன்னை பற்றி ஊடகங்கள் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக, நாடு பிரிப்பு என்று சுரேஷ் பேசி உள்ளார். கர்நாடகாவை 2 ஆக பிரித்து, வடமாவட்டங்களுக்கு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இப்போது நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று பேச்சு அடிடுகிறது.

- தினேஷ்குமார்,

பொது செயலர், ராஜாஜிநகர் தொகுதி,

கர்நாடகா ஆம் ஆத்மி

பிரச்னைக்கு தீர்வு ஆகாது

இந்தியா என்பது ஒரு நாடு தான். எக்காரணம் கொண்டும் தனி நாடு கேட்கவே கூடாது. எம்.பி., சுரேஷ் தனி நாடு கேட்டதை கண்டிக்கிறேன். இந்தியாவில் ஏற்கனவே நிறைய மக்கள் பிரச்னைகள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தொடர்பான பிரச்னைகளில், கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தேவையில்லாதவற்றை அரசியல்வாதிகள் பேசுவதை நிறுத்த வேண்டும். மொழி, இனம், பாராம்பரியம், கலாசாரம் மாறுபடலாம். இந்தியர்கள் என்பது எப்போம் மாறாது. தனி நாடு கேட்பது எப்போதும் பிரச்னைக்கு தீர்வு ஆகாது.

- ரூத் மனோரமா,

தலைவி,

கர்நாடகா உமன்ஸ் வாய்ஸ்

கூட்டுகுடும்பம் உடைப்பு

தனி நாடு என்ற எம்.பி., சுரேஷின் கருத்தை, அவரது கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த கருத்து சுரேஷின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனாலும் அவரது கருத்து, பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதால், தனி நாடு கேட்கலாமா. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு தனி நாடு கேட்டால், நிலைமை என்ன ஆகும். இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று நினைத்து தான், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது. தனி நாடு என்பது கூட்டுகுடும்பத்தை இரண்டாக உடைக்கும் செயல். இத்தகைய கருத்து இனி கூற வேண்டாம்.

- சிவகுமார்,

தொழில் அதிபர்,

ஜெயநகர்

- நமது நிருபர் -

      Dinamalar
      Follow us