sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!: வக்பு மசோதா விவகாரத்தில் மோதல்: பார்லி., கூட்டுக்குழுவிலும் கடும் அமளி

/

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!: வக்பு மசோதா விவகாரத்தில் மோதல்: பார்லி., கூட்டுக்குழுவிலும் கடும் அமளி

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!: வக்பு மசோதா விவகாரத்தில் மோதல்: பார்லி., கூட்டுக்குழுவிலும் கடும் அமளி

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!: வக்பு மசோதா விவகாரத்தில் மோதல்: பார்லி., கூட்டுக்குழுவிலும் கடும் அமளி


ADDED : ஜன 24, 2025 11:46 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டில்லி சட்டசபை தேர்தலில் அரசியல் லாபம் காண்பதற்காகவே வக்பு மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றத் துடிக்கின்றனர். இதை ஏற்க முடியாது' என குற்றம்சாட்டி, பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 10 பேர் அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

நாடு முழுதும் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கத்துடன், வக்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.

வக்பு மசோதாவை ஆய்வு செய்து வரும் பார்லிமென்ட் கூட்டுக்குழு, இதுவரை டில்லியில் மட்டும், 34 ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வக்பு சொத்துக்கள் தொடர்புடைய 24 தரப்புகளையும், நாடு முழுதும் உள்ள 20க்கும் மேற்பட்ட வக்பு வாரியங்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்


இந்த மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டுமென்ற முடிவில் மத்திய அரசு இருந்து வரும் நிலையில், இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

கடந்த 21ல், உ.பி., தலைநகர் லக்னோவில் நடந்த கடைசி ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் பேசிய, கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால், 'வரும் 24ல் டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்' என கூறியிருந்தார்.

எதிர்பார்த்ததை போலவே, நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும் காரசாரமாக பேசினர்.

'இந்த சட்ட மசோதாவில் கொண்டு வரப்படும் திருத்தங்கள் குறித்து முழுமையாகப் படித்துப் பார்ப்பதற்கு போதுமான நேரம் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை' என்று கூறி வாக்குவாதத்தில் இறங்கினர்.

இதையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போது, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் உமர் பரூக் தலைமையிலான குழுவை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

அப்போதும், கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. மார்ஷல்கள் சிலரும் உள்ளே அழைக்கப்பட்டதால் நிலைமை தீவிரமானது.

இந்நிலையில், கூட்டத்திலிருந்து திடீரென திரிணமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி, காங்கிரசைச் சேர்ந்த நசீர் உசேன் ஆகியோர் வெளியே வந்தனர்.

அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த பார்லிமென்ட் கூட்டுக்குழு அலுவல்கள் அனைத்துமே கேலிக்கூத்து. எங்கள் கருத்துகள் எதுவும் பரிசீலிக்கப்படுவதில்லை. இஷ்டம்போல ஆளும் தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.

கூட்டம் நடத்தும் தேதி, அதில் விவாதிக்க வேண்டிய விஷயம் ஆகியவை குறித்து எங்களிடம் ஆலோசிக்கப்படாமலேயே அனைத்தும் நடக்கிறது.

இன்று காலை டில்லி வந்திறங்கியுடன், 'ஒவ்வொரு திருத்தங்கள் வாரியாக இன்று நடக்க இருந்த ஆய்வுக்கூட்டம், 27 ம் தேதி நடக்கும்' என்று தகவல் தருகின்றனர்.

பலமுறை கூறிவிட்டோம், 27ல் கூட்டம் வேண்டாம் என்றும், 30, 31ல் வைத்துக் கொள்ளலாம் என்றும். ஆனாலும், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலம் போல நடந்து கொள்கின்றனர்.

முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக டில்லி தேர்தலை மையமாக வைத்து இந்த மசோதாவை அவசர கதியில் நிறைவேற்றத் துடிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்களான 10 பேரை, சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் பா.ஜ., மூத்த எம்.பி., நிஷிகாந்த் துபே மூலம் கொண்டு வரப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

எதிர்ப்பு


இதுகுறித்து நிஷிகாந்த் துபே கூறுகையில், ''எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் செயல்கள் ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

அவர்களின் நடத்தை மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. இழிவான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.

எதிர்க்கட்சி எம்.பி.,யான அசாதுதீன் கேட்டதன் அடிப்படையில்தான், காஷ்மீர் முஸ்லிம் தலைவர் உமர்பரூக் தலைமையிலான குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதற்காகவே நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டது. திருத்தங்கள் வாரியாக நடைபெற இருந்த ஆய்வுக்கூட்டம் 27ல் நடைபெறும். மசோதா குறித்து எதிர்ப்பு குறிப்புகளை வழங்குவோர் 27ல் வழங்கலாம். 29ல் சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

பார்லி., கூட்டுக்குழு தலைவர், ஜெகதாம்பிகா பால் கூறியதாவது:

திரிணமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி, இழிவான சொல்லை என்னை நோக்கி பயன்படுத்தினார். கீழ்த்தரமாகவும் பேசினார். வந்திருக்கும் குழுவிடம் கருத்துகள் கேட்கலாம் என்று, பலமுறை கூறியும், அவர்கள் முன்னிலையே ரகளை செய்தார். இரு முறை ஒத்திவைத்த பிறகும், மீண்டும் மீண்டும் கோஷம் போடுவதும் அமளி செய்வதுமாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இருந்தனர். வந்திருக்கும் விருந்தினர் குழு முன்பாக, தொடர் ரகளை செய்ததால்தான்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்

காரணம் என்ன?



கல்யாண் பானர்ஜி, நதீம் - உல் ஹக் திரிணமுல்

முகமது ஜாவேத், இம்ரான் மசூத், நசீர் ஹூசைன்காங்கிரஸ்

ராஜா, முகமது அப்துல்லா தி.மு.க.,

அசாதுதீன் ஓவைசி ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

மொஹிபுல்லா சமாஜ்வாதி

அரவிந்த் சாவந்த் சிவசேனா உத்தவ்

காரணம் என்ன?



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us