இருக்கையில் அமர்ந்த பின்னரே வருகைப்பதிவு: எம்.பி.,க்களுக்கு கடிவாளம்
இருக்கையில் அமர்ந்த பின்னரே வருகைப்பதிவு: எம்.பி.,க்களுக்கு கடிவாளம்
UPDATED : ஜன 20, 2026 10:48 PM
ADDED : ஜன 20, 2026 10:47 PM

புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், 'இருக்கையில் அமர்ந்த பின்னரே இனி, பி.,க்கள் வருகையை பதிவு செய்ய முடியும்,' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
வரும் 28ல், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகையை பதிவு செய்ய பார்லி., வளாகங்களில் ஒரே நேரத்தில் எம். பி.,க்கள் கூடுவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்த பின், தங்களது மேஜையில் உள்ள நவீன சாதனங்களை பயன்படுத்தி வருகையை பதிவு செய்யலாம். ஸ்மார்ட் அடையாள அட்டை, கைரேகை பதிவு, தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
இந்த புதிய நடைமுறை, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் நேர விரயம் குறையும். மேலும், எம்.பி.,க்கள் தங்கள் வருகையை பதிவு செய்த பின், சபையை விட்டு வெளியே றுவதும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

