sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முக்திநாத் புனித பயணம்: டில்லி-நேபாளத்திற்கு நேரடி பஸ் சேவை தொடக்கம்

/

முக்திநாத் புனித பயணம்: டில்லி-நேபாளத்திற்கு நேரடி பஸ் சேவை தொடக்கம்

முக்திநாத் புனித பயணம்: டில்லி-நேபாளத்திற்கு நேரடி பஸ் சேவை தொடக்கம்

முக்திநாத் புனித பயணம்: டில்லி-நேபாளத்திற்கு நேரடி பஸ் சேவை தொடக்கம்


ADDED : பிப் 04, 2026 07:58 PM

Google News

ADDED : பிப் 04, 2026 07:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முக்திநாத் புனித பயணத்தை மேம்படுத்தும் வகையில், டில்லியிலிருந்து நேபாளத்திற்கு(பெனி) நேரடி பஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது.

நேபாளத்தின் கண்டகி மாகாணத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான விஷ்ணு கோவிலான முக்திநாத்திற்கு பெனி ஒரு நுழைவாயிலாக உள்ளது. 'முக்தியின் இறைவன்' என்று அழைக்கப்படும் முக்திநாத் கோவில், ஹிந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய இருவருக்கும் புனிதமானதாகும். அவர்கள் முறையே இந்து தெய்வமான விஷ்ணு மற்றும் பௌத்த தெய்வமான அவலோகிதேஸ்வரரின் இருப்பிடமாக இந்தக் கோவிலை வழிபடுகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

இந்த நேரடி பஸ் சேவை, டில்லியிலிருந்து புறப்பட்டு ஆக்ரா,அயோத்தி, பைரவா, வாலிங் மற்றும் சியாங்ஜா வழியாக பெனியை அடையும்.1,400 கி.மீ துாரம் உள்ள இந்தப் பயணத்திற்கு 27 மணிநேரம் ஆகும்.

டில்லியிலிருந்து தினமும் மாலை 4:00 மணிக்கு சரோஜினி நகரிலிருந்து புறப்படும், பெனியிலிருந்து தினமும் காலை 6:45 மணிக்கு புறப்படும்.

இந்தப் பயணத்திற்கு பாஸ்போர்ட் தேவையில்லை, ஆனால் முறையான அடையாள ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us