தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரசாரம் மும்பை பொறியியல் மாணவர் கைது

 பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரசாரம் மும்பை பொறியியல் மாணவர் கைது

 பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரசாரம் மும்பை பொறியியல் மாணவர் கைது


ADDED : மார் 07, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: பயங்கரவாத அமைப்புகளின் பிரசாரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாக, மும்பையைச் சேர்ந்த பொறியியல் மாணவரை, மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவின் மும்பையில், 'வாட்ஸாப், டெலிகிராம்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி பயங்கரவாத சிந்தனைகள் பரப்பப்படுவதாக, ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, குர்லா, சிவாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எஸ்., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பொறியியல் மாணவர் ஆயான் ஷேக் கைது செய்யப்பட்டார்.

ஏ.டி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, மாணவர் ஆயான் ஷேக் இடத்தில் ஆய்வு நடத்தினோம். அவரது, 'லேப்டாப், மொபைல் போன்' உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தோம்.

அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - -இ- - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தொடர்புடைய ஆடியோ, வீடியோ பதிவுகள் இருந்தன.

இவற்றை டெலிகிராம் செயலியில் பலருக்கு அவர் அனுப்பி உள்ளார். மேலும், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும்படி ஊக்குவித்துள்ளார். அவரை, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்.

அவரது மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளன.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் இரு மாணவர்களிடமும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us