34 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பில் மும்பை
34 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பில் மும்பை
ADDED : செப் 05, 2025 12:47 PM

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து, முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்திற்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பையில் நுழைந்து விட்டதாகவும், அது வெடித்தால் மொத்த நகரமும் அழிந்து விடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ்அப் நம்பருக்கும் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.
மேலும், அந்த மிரட்டல் செய்தியில், லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து இந்த தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மும்பை போலீசார், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த மிரட்டல் குறித்து விசாரித்து வருகின்றனர்.