சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு: முதலீட்டாளருக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு
சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு: முதலீட்டாளருக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு
ADDED : செப் 06, 2024 06:26 PM

மும்பை: சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிவை சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள்( 1.24%) சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகமானது. சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் இன்போசிஸ், ஐடிசி, எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை சரிவை சந்தித்தன.
நிப்டியில் வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு , ஆட்டோ, வங்கி நிதிச் சேவைகள், நுகர்பொருள் துறைகள் சரிவை சந்தித்தன.
சென்செக்சில், இன்றைய வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.5.31 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.