sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேச திருநங்கைகள் 21 பேர் கைது

/

மும்பையில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேச திருநங்கைகள் 21 பேர் கைது

மும்பையில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேச திருநங்கைகள் 21 பேர் கைது

மும்பையில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேச திருநங்கைகள் 21 பேர் கைது

3


ADDED : பிப் 25, 2026 01:02 PM

Google News

3

ADDED : பிப் 25, 2026 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்த 21 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

மும்பையின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வெர்சோவாவில் உள்ள ஷாகுல்ஷா தர்கா பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த திருநங்கைகளை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்களின் ஆவணங்களை பறித்து சோதனை செய்த போது, அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து, 21 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் பலர், கடந்த 6 முதல் 8 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். இவர்கள் மும்பை மட்டுமின்றி குஜராத் மற்றும் டில்லியிலும் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் கோல்கட்டா மற்றும் மிசோரம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், புனே நகர போலீசார், புத்வார் பெத் சிவப்பு விளக்கு பகுதியில் நடத்திய பிரம்மாண்ட தேடுதல் வேட்டையில் 2 வங்கதேசப் பெண்கள் பிடிபட்டனர்.






      Dinamalar
      Follow us