தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கொலை, பலி, படுகாயம், பறிமுதல்

 கொலை, பலி, படுகாயம், பறிமுதல்

 கொலை, பலி, படுகாயம், பறிமுதல்


ADDED : பிப் 24, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிரிக்கெட் விளையாட்டின் போது நடந்த மோதலில் சிறுவன் கொலை

புதுடில்லி: கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில், சிறுவன் அடித்து கொல்லப்பட்டான்.

மேற்கு டில்லியின் திலக் நகரில் உள்ள பூங்கா அருகே கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, 15 வயது சிறுவனுக்கும், இன்னொரு சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், அந்த 15 வயது சிறுவன், தன் வீட்டிற்கு சென்று, தன்னை அந்த, 15 வயது சிறுவன் அடித்து விட்டதாக கூறினார்.

இதை கேட்ட அந்த வீட்டில் இருந்த அந்த சிறுவனின் உறவினர்களான, 17 மற்றும் 15 வயது சிறுவன் கோபம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவில் அந்த 15 வயது சிறுவனை கண்டுபிடித்து, அவனுடன் மூன்று பேரும் சண்டையிட்டனர்.

இதில், அந்த 15 வயது சிறுவன் மயக்கமடைந்து விழுந்து விட்டான். அவனை அங்கேயே விட்டு சென்றனர். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் இறந்து விட்டான்.

இதையடுத்து, அவனை தாக்கி கொன்றதாக, மூன்று சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரிக்கின்றனர்.

பள்ளியின் வாட்ச்மேன் தீப்பிடித்து பலியான சோகம்

புதுடில்லி: அவுட்டர் டில்லியின் பள்ளி ஒன்றில் வாட்ச்மேன், தன் அறையில் கருகி உயிரிழந்து கிடந்தார்.

ஹரியானா மாநிலத்தின் ரோடக் பகுதியை சேர்ந்த நரேஷ்குமார், 58, இன்னும், இரண்டு ஆண்டுகளில் பணியிலிருந்து, ஓய்வு பெற இருந்தார். அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணிக்கு பணிக்கு வந்தார். அதிகாலை நேரத்தில் பணி முடிந்ததும், அங்கேயே தங்கியிருந்தார்.

நேற்று காலையில் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து, புகை வருவதை அறிந்து, அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, நரேஷ்குமார் இறந்து கிடந்தார். அவர் உடல் மொத்தமாக கருகிப் போயிருந்தது.

அதையடுத்து, அந்த அறையில் பற்றிய தீயை அணைத்த வீரர்கள், தீ எதற்காக பிடித்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

மஹிந்திரா தார் கார் மோதியதில் இ - ரிக் ஷாவில் இருந்தோர் படுகாயம்

நொய்டா: டில்லி அருகே உள்ள நொய்டாவில், இ - ரிக் ஷா மீது வேகமாக வந்த சொகுசு கார் மோதியது தொடர்பாக, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டார்.

பிங்கி சவுகான் என்ற கட்டுமான தொழில் வல்லுனர், நேற்று தன் மஹிந்திரா தார் சொகுசு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செக்டார் 45ஐ சேர்ந்த அவர், தன் காரில் வேகமாக சென்ற போது, சாலையோரம் சென்று கொண்டிருந்த இ - ரிக் ஷா மீது மோதியதில், அந்த ரிக் ஷாவில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.

அதில் இருந்த ராஜேஷ், அனுாப், ராகேஷ், ஓம் பிரகாஷ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்து தொடர்பாக, மஹிந்திரா சொகுசு காரை ஓட்டி வந்த பிங்கி சவுகான் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகிறார்.

மெட்ரோ ரயில் முன் பாய்ந்து ராஜஸ்தான் நபர் தற்கொலை

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் முன் பாய்ந்து, ராஜஸ்தானை சேர்ந்த, 45 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தம்நகர் கிழக்கு மெட்ரோ ஸ்டேஷனில் இந்த விபத்து நிகழ்ந்தது. ராஜஸ்தானை சேர்ந்த மகாராஜ் சிங், 45, என்ற நபர், தன் உறவுக்கார பெண் ஒருவரின் திருமணத்திற்காக, சில நாட்களுக்கு முன் டில்லிக்கு வந்திருந்தார். ராஜஸ்தானில் பெயின்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஏற்கனவே, மன நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலையில், உத்தம் நகர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவி, 18 வயதில் மகள், 17 மற்றும் 20 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளன.

அவரின் மரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.5.42 கோடி பொருட்களுடன் ஏர்போர்ட்டில் பெண் கைது

புதுடில்லி: புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்கா பாஸ்போர்ட் வைத்திருந்த பெண்ணிடம் இருந்து, 5.42 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வாட்ச், வெளிநாட்டு கரன்சி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஹாங்காங் நகரிலிருந்து நேற்று வந்த பயணியரை, டெர்மினல் 3ல் சுங்க இலாகாவினர் சோதனை செய்தனர். அப்போது, பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை வாங்கி ஆய்வு செய்தனர்.

அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண் வைத்திருந்த பர்சை சோதனை செய்த போது, அதிலிருந்த 10 கிலோ தங்கம், வைரம் மற்றும் ஆடம்பர வாட்ச் போன்றவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணிடம் எங்கிருந்து இவற்றை கொண்டு வருகிறீர்கள் என கேட்ட போது, முறையான பதில் இல்லை.

அதையடுத்து, அந்த பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மதிப்பு, 5.42 கோடி ரூபாய் என கூறினர்.

அதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us