உள்ளடக்கத்திற்கு செல்ல
முன்விரோதம் காரணமாக கொலை :சிறுவன் உள்ளிட்ட 3 பேர் சிக்கினர்
முன்விரோதம் காரணமாக கொலை :சிறுவன் உள்ளிட்ட 3 பேர் சிக்கினர்
ADDED : ஏப் 03, 2026 03:47 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:வட மேற்கு டில்லி மாவட்டத்தில், 20 வயது நிதேஷ் என்பவரை கத்தியால் குத்திக் கொன்றதாக, மூன்று பேர் சிக்கினர்.
ஷாலிமார்பாக் என்ற இடத்தில், 20 வயது வாலிபரை, மூன்று பேர் கத்தியால் குத்திக் கொன்றதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், தரண், 18, மோன்டி, 22, மற்றும் ஒரு சிறுவன் சேர்ந்து, அந்த வாலிபரை குத்திக் கொன்றதை கண்டுபிடித்தனர்.
குற்றவாளிகளை பிடிக்க, அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும், வீடு, வீடாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், அந்த மூவரும் போலீசில் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக அவர்களுக்கும், கொலையான, நிதேஷுக்கும் இடையே தகராறு இருந்தது தெரிய வந்தது.
அதையடுத்து, கொலையாளிகள் மூவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
