ADDED : அக் 24, 2025 02:07 AM
பரீதாபாத்:கால்நடை மருத்துவர் ஒருவர், தன் வீட்டில் குடியிருக்கும் நபரை அடித்து கொன்றது தொடர்பாக, கைது செய்யப்பட்டார்.
குல்தீப் எனும் 43 வயதான, தனியார் கால்நடை மருத்துவர், போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் கூறப்படுவதாவது:
பரீதாபாத் நகரின் சிஹி என்ற இடத்தில் குல்தீபுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதன் அருகில் உள்ள மற்றொரு வீட்டை, அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில், உத்தர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அனுஜ் வசித்து வந்தார்.
தன் வீட்டு பெண்கள் மீது, அனுஜ் தவறான எண்ணம் கொண்டிருந்ததால், அவரை கம்பால் குல்தீப் அடித்து கொன்றார். பின், அவரது உடலை, தன் இரு சக்கர வாகனத்தில் கட்டி, துாக்கி சென்று, கிராமப்புறத்தில் போட்டு வந்ததாக கூறினார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
அனுஜை அடித்து கொன்றது தொடர்பாக, குல்தீபை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

