sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கொலை, கொள்ளை, வழக்குகள்

/

 கொலை, கொள்ளை, வழக்குகள்

 கொலை, கொள்ளை, வழக்குகள்

 கொலை, கொள்ளை, வழக்குகள்


ADDED : பிப் 20, 2026 01:08 AM

Google News

ADDED : பிப் 20, 2026 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு வழிப்பாதையில் மாற்றி பயணம்: 182 வழக்கு பதிவு

புதுடில்லி: டில்லியில் கடந்த ஜன., 3 முதல், பிப்., 9ம் தேதி வரை, ராங் சைடு டிரைவிங் தொடர்பாக, 182 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ராங் சைடு டிரைவிங் மிகப்பெரிய போக்குவரத்து குற்றமாக கருதப்படுவதில்லை. குறிப்பாக, துாரமான இடத்தை கடக்க, ஆங்காங்கே, ராங் சைடு எனும் ஒருவழிப்பதையில் எதிரே பயணம் செய்வது நடக்கிறது.

தலைநகர் டில்லியில் சராசரியாக, ஐந்து பேர் மீது போக்குவரத்து போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கின்றனர். இதுவும் போக்குவரத்து வி தி மீறல் தான். அந்த வகையில், டில்லியில் மட்டும், ஜன., 3 முதல், பிப்., 9ம் தேதி வரை, 182 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இதன் படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 5 பே ர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்த முறையில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக, வழக்குகள் பதிவு செய்வதில்லை. மாறாக, போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வாயிலாக மட்டுமே இவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

மெட்ரோவில் திருட்டு அதிகரிப்பு செம்பு கம்பிகளை மாற்ற முடிவு

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில், செம்புக்கம்பிகள் மர்ம நபர்களால் அடிக்கடி திருடப்படுவதால், செம்புக் கம்பிகளுக்கு பதிலாக அலுமினிய கம்பிகளை, சிக்னல் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த உள்ளது.

டில்லி மெட்ரோ ரயில்கள், 175 கி.மீ.,க்கு இயக்கப்படுகின்றன. யமுனை நதிக்கரை பாதை, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் பாதை, சீலாம்பூர் மற்றும் வெல்கம் ஸ்டேஷன் பகுதிகளில் உள்ள பிங்க் லைன் பகுதிகளில், மெட்ரோ ரயில் பாதையில், சிக்னல் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு, செம்புக் கம்பிகள் உள்ளன.

அதிக விலை உள்ள செம்புக் கம்பிகளை திருடுவதற்காகவே ஒரு கும்பல், மெட்ரோ ரயில் பாதையில் பயணிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும், 89 இடங்களில், செம்புக் கம்பிகள் திருடப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்தமாக, செம்புக் கம்பிகளை மாற்றி விட்டு, அந்த இடங்களில், விலை மலிவான அலுமினிய கம்பிகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளை, அடுத்த ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 32.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணத்திற்காக நடந்த கொள்ளையில் பெண் கொலை: இருவர் சிக்கினர்

புதுடில்லி: பணத்திற்காக, பெண்ணை கொன்ற குற்றத்திற்காக, இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட கிழக்கு டில்லியின் அமர் காலனி என்ற இடத்தில், 55 வயது மதிக்கத்தக்க விமலா தேவி என்பவர், கடந்த, 15ம் தேதி கொல்லப்பட்டார். திருமணமான அவரின் இரு மகன்கள், பிற இடங்களில் வசித்து வந்தனர்.

இந்த பெண்ணின் கணவர், வெளியூர் சென்றிருந்ததை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், கழுத்து மற்றும் கையில் வெட்டி, அதிக ரத்தம் போக வைத்து கொன்றனர்.

இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு, முதலில் ஒன்றுமே புரியவில்லை. எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியாமல் விழித்தனர்.

பின், உமேஷ், 21, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் படி, விபின், 22, என்பவர் சிக்கினார். நந்த் நக்ரி என்ற பகுதியை சேர்ந்த இருவரும் கடந்த சில நாட்களாக பண நெருக்கடியில் இருந்ததால், அதை சரி செய்ய, அந்த பெண்ணை கொல்ல முடிவு செய்து, தங்க நேரத்திற்காக காத்திருந்தனர்.

அந்த பெண்ணின் கணவர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த இளம் குற்றவாளிகள் இருவரும், அந்த பெண்ணின் வீட்டில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்த போது, அலறிய அந்த பெண்ணை கொடூரமாக குத்தி கொன்றனர்.

இந்த தகவலை தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கத்திக்குத்து காயங்களுடன் வாலிபர் உடல் மீட்பு

புதுடில்லி: கிழக்கு டில்லியின் பாண்டவ நகரில் உள்ள சஞ்சய் லேக் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன், 36 வயது மதிக்கத்தக்க நபர் கொல்லப்பட்டார். அவரை கொன்றவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தவர், லுகா சவுத்ரி என்ற விக்ரம். சசி கார்டன் பகுதியை சேர்ந்த அவர், நேற்று முன்தினம் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அவர் உடலை மீட்ட போலீசார், தடய அறிவியல் மற்றும் உடல் கூறாய்வுக்காக அவரின் உடலை, லால் பகதுார் சாஸ்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து, குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us