பீஹார் இளம் எம்எல்ஏ தமிழில் பாடிய முருகன் பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்
பீஹார் இளம் எம்எல்ஏ தமிழில் பாடிய முருகன் பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்
UPDATED : பிப் 18, 2026 02:45 PM
ADDED : பிப் 18, 2026 02:07 PM

பாலக்காடு: பீஹார் சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைதிலி தாகூர், தமிழில் பாடிய முருகன் பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பீஹார் மாநிலத்தின் இளம் வயது எம்.எல்.ஏ., மைதிலி தாகூர். நாட்டுப்புற பாடகியான மைதிலி தாகூர், பா.ஜ.,வில் இணைந்த ஒரே நாளில் எம்.எல்.ஏ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் வெற்றியும் பெற்றவர்.
25 வயது மட்டுமே நிரம்பிய மைதிலி தாகூர், சமூக வலைதளத்தில் பிரபலமானவர். நாட்டுப்புற மற்றும் ஆன்மீக பாடகியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இதில் 'அழகான பழனிமலை ஆண்டவா..' என்ற தமிழ் பாடலை இனிமையாக பாடி, அங்கிருந்த அனைவரின் மனங்களையும் வென்றார்.
அவர் பாடிய பாடலின் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவ, அது வைரலாகியுள்ளது. தமிழ் தெரியாத எம்எல்ஏ, மலையாள தேசத்தில், தமிழ் மொழியில், இனிமையாக முருகன் பாடலை பாடியதை பலரும் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

