மும்பை டூ அயோத்திக்கு முஸ்லீம் பெண் பாதயாத்திரை: ராமர் கோயிலை தரிசிக்க ஆர்வம்
மும்பை டூ அயோத்திக்கு முஸ்லீம் பெண் பாதயாத்திரை: ராமர் கோயிலை தரிசிக்க ஆர்வம்
UPDATED : ஜன 31, 2024 01:16 PM
ADDED : ஜன 31, 2024 01:01 PM

அயோத்தி: மும்பையில் இருந்து அயோதிக்கு முஸ்லீம் பெண் ஷப்னம் ஷேக் நடந்தே வந்தார். அயோத்தியில் இன்று அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்து மதம் அல்லாதவரும் அயோத்தியில் ராமரை தரிசிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் இருந்து 1,425 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அயோத்திக்கு ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் வந்தார். பின்னர் அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார். அவர் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.