ADDED : ஜன 05, 2026 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஹஜிபூர் கிராமத்தில் 1,339 சதுர மீட்டர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, 25 ஆண்டுக்கு முன் மதினா மசூதி மற்றும் மதரஸா எனப்படும் இஸ்லாமிய கல்வியை கற்றுத்தரும் பள்ளி ஆகியவை கட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற நான்கு மாத அவகாசம், அரசு சார்பில் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் மசூதி மற்றும் மதரஸா நிர்வாக குழு உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து அவற்றை இடித்து அகற்றினர்.
அந்த நிலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

