குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் "காண்டம்" பயன்படுத்துகின்றனர்: பிரதமருக்கு ஓவைசி பதில்
குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் "காண்டம்" பயன்படுத்துகின்றனர்: பிரதமருக்கு ஓவைசி பதில்
UPDATED : ஏப் 29, 2024 12:59 PM
ADDED : ஏப் 29, 2024 12:55 PM

புதுடில்லி: முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என பிரதமர் மோடியின் கருத்துக்கு, குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் அதிகம் 'காண்டம்' பயன் படுத்துகிறார்கள் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதில் அளித்துள்ளார்.
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினர். அதிக குழந்தை பெற்றவர்கள் மற்றும் நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள்
இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாகிவிடும் என இந்துக்கள் மத்தியில் பிரதமர் மோடி அச்சத்தை விதைக்கிறார். எவ்வளவு காலம் முஸ்லிம்கள் பற்றி அச்சத்தை உருவாக்குவீர்கள்?. எங்கள் மதம் வேறு ஆனால் நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மக்கள்தொகை
முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள் என்று நீங்கள் ஏன் அச்சத்தை உருவாக்குகிறீர்கள்?. தரவுகளின் படி, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மக்கள்தொகை குறைந்துள்ளது. குழந்தை பிறப்பை தடுக்க முஸ்லிம்கள் அதிகம் 'காண்டம்' பயன்படுத்துகிறார்கள். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. இந்தியாவில் கருத்தடை சாதனங்கள் அதிகம் பயன்படுத்துவர்கள் முஸ்லிம்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

