ADDED : அக் 25, 2025 11:43 PM

பீஹார், காட்டாட்சிக்கு திரும்புமா அல்லது வளர்ச்சிப் பா தையை நோக்கிச் செல்லுமா என்பதை இந்த சட்டசபை தேர்தல் தீர்மானிக்கும். லாலு பிரசாத் வெற்றி பெற்றால், ஊழல் மிகுந்த காட்டாட்சி அமையும். தே.ஜ., கூட்டணி வென்றால் மட்டுமே பீஹார் வளர்ச்சி அடையும். லா லு - ராகுல் கூட்டணியை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
பொய் சொல்லும் மத்திய அரசு!
பண்டிகைக் காலத்தில், பீஹாருக்கு போதுமான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கவில்லை. இதனால், பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் பீஹார் தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பீஹாருக்கு அதிக ரயில்கள் இயக்கப்படுவதாக மத்திய அரசு பொய் கூறுகிறது.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
வறுமை இல்லா கேரளா!
நவ., 1ல், கேரள மாநிலம் தன் நிறுவன தினத்தை கொண்டாடும் போது, தீவிர வறுமை இல்லாத, நாட்டின் முதல் மாநிலமாக இருக்கும். இடது ஜனநாயக முன்னணி அரசால், மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனர். கேரளா மற்றும் மாநில மக்களின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து அயராது உழைப்போம்.
பினராயி விஜயன் கேரள முதல்வர், மார்க்.கம்யூ.,

