ADDED : நவ 16, 2025 11:07 PM

நம் நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாத பிரச்னை நீடித்து வருகிறது. இவற்றை உறுதியாகவும், திறம்படவும் மத்திய அரசு கையாள வேண்டும். நம் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம். டில்லி தாக்குதலுக்கான காரணம் பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும்.
சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
பின்வாங்கக்கூடாது!
பீஹார் மக்களுக்கு, பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ள தே.ஜ., கூட்டணி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். மஹாராஷ்டிராவில் செய்தது போல், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கக் கூடாது.
பிரியங்கா சதுர்வேதி ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா பிரிவு
மக்களின் ஆதரவு!
பீஹாரில் தே.ஜ., கூட்டணியின் நல்லாட்சி, ஊழல் இல்லாத நிர்வாகம், வளர்ச்சி ஆகியவற்றிற்கு மக்களின் ஆதரவு இருப்பதை தேர்தல் வெற்றி காட்டுகிறது. எனவே, சேவையாற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். பொய் வாக்குறுதிகளை அளித்த எதிர்க்கட்சியினரை, அம்மாநில மக்கள் நிராகரித்துள்ளனர்.
ராஜிவ் சந்திரசேகர் கேரள தலைவர், பா.ஜ.,

