என் கிளினிக் எனக்காக காத்திருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
என் கிளினிக் எனக்காக காத்திருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
ADDED : மார் 03, 2024 08:09 PM

புதுடில்லி: என் கிளினிக் எனக்காக காத்திருக்கிறது என பா.ஜ.,வில் சீட் வழங்கப்படாதது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் பார்லி.,பொது தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கட்சியின் தலைமையான பா.ஜ., 195 பேர் அடங்கிய தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியலில் மீண்டும் போட்டியிடுவதற்காக 30க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 4 பேர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
இது குறித்து அவர் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: கடந்த முப்பது ஆண்டுகளாக சட்டமன்றம் மற்றும் பார்லி தேர்தல்களில் வென்று கட்சி மற்றும் மாநில, மத்திய அரசுகளில் மதிப்பு மிக்க பதவிகளை வகித்தேன்.
டில்லி சுகாதார அமைச்சராகவும், இரண்டு முறை மத்திய சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினேன். என் இதயம், போலியோ இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கு முதலில் உழைக்கவும், அதன் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மற்றும் கோவிட்-19 உடன் போராடும் கோடிக்கணக்கான நமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பேணவும் எனக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
முப்பது ஆண்டுகளாக நீடித்த இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் பங்களித்த கட்சி காரியகர்த்தாக்கள்,தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மற்றும் எனது கட்சித் தலைவர்கள் ஆதரவாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,
'இந்தியாவின் வரலாற்றில் மிகவும் ஆற்றல் மிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஜியுடன் நெருக்கமாக பணியாற்றியதை நான் ஒரு பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் மீண்டும் வீரத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வர நாடு வாழ்த்துகிறது. என பதிவிட்டு உள்ளார்.
மேலும் கிருஷ்ணாநகரில் உள்ள எனது இ.என்.டி., கிளினிக் நான் திரும்புவதற்காக காத்திருக்கிறது,' எனபதிவிட்டு உள்ளார்.
முன்னதாக பா.ஜ.,தலைவர் ஜெயந்த் சின்ஹா மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் .பா.ஜ.,எம்.பியுமான கவுதம் கம்பீர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

