sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைசூரு - மானாமதுரை 11, 12ல் சிறப்பு ரயில்

/

மைசூரு - மானாமதுரை 11, 12ல் சிறப்பு ரயில்

மைசூரு - மானாமதுரை 11, 12ல் சிறப்பு ரயில்

மைசூரு - மானாமதுரை 11, 12ல் சிறப்பு ரயில்


ADDED : மார் 07, 2024 05:08 AM

Google News

ADDED : மார் 07, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : 'பயணியர் வசதிக்காக மைசூரு - மானாமதுரை இடையே வரும் 11, 12ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ரயில் எண் 06237: மைசூரு - மானாமதுரை சிறப்பு ரயில், வரும் 11ம் தேதி மைசூரில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:10 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06238: மானாமதுரை - மைசூரு சிறப்பு ரயில், வரும் 12ம் தேதி மானாமதுரையில் இருந்து மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1:55 மணிக்கு மைசூரு வந்தடையும்.

* ரயில் எண் 18111: டாடா நகர் - யஷ்வந்த்பூர் வாராந்திர ரயிலில், இன்று முதல் கூடுதலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 18112: யஷ்வந்த்பூர் - டாட நகர் வாராந்திர விரைவு ரயிலில், வரும் 10ம் தேதி முதல் கூடுதலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

* ரயில் எண் 12551 / 12552: விஸ்வேஸ்வரய்யா முனையம் - காமாக்யா - விஸ்வேஸ்வரய்யா முனையம் வாராந்திர விரைவு ரயில், வரும் 9ம் தேதியும், மறு மார்க்கத்தில் 13ம் தேதியும் முதல் பீஹார் மாநிலம், பார்சோய் ரயில் நிலைத்தில் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us