sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைசூரு - சென்னை ரயில் புறப்பாடு அசோகபுரம் நிலையத்திற்கு மாற்றம்

/

மைசூரு - சென்னை ரயில் புறப்பாடு அசோகபுரம் நிலையத்திற்கு மாற்றம்

மைசூரு - சென்னை ரயில் புறப்பாடு அசோகபுரம் நிலையத்திற்கு மாற்றம்

மைசூரு - சென்னை ரயில் புறப்பாடு அசோகபுரம் நிலையத்திற்கு மாற்றம்

1


ADDED : பிப் 14, 2025 05:09 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:09 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு சிட்டியிலிருந்து புறப்பட்டு வந்த சென்னை ரயில், வரும் 16ம் தேதி முதல் அசோகபுரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

மைசூரு அசோக்புரம் ரயில் நிலையம், 37.5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள், முடிந்து தயாராகி விட்டன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், மைசூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு சென்றே ரயில்களில் ஏறி வந்தனர். ரயில்களை மைசூரு அசோகபுரத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணியரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்த இரு இடங்களுக்கும் இடையே ஐந்து கி.மீ., துாரம்.

இதையடுத்து, இந்த ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் எண்கள் 16021 / 22 சென்னை சென்ட்ரல் - மைசூரு காவிரி விரைவு ரயில்; எண்கள் 12609 / 10 சென்னை சென்ட்ரல் - மைசூரு விரைவு ரயில்; எண்கள் 12785 / 86 காச்சிகுடா - மைசூரு விரைவு ரயில்; எண்கள் 20623 / 24 மைசூரு --- பெங்களூரு சிட்டி ஜங்ஷன் மால்குடி விரைவு ரயில்.

எண்கள் 06525 / 26 பெங்களூரு சிட்டி - மைசூரு மெமு; 06255 / 56 பெங்களூரு சிட்டி - மைசூரு மெமு; 06557 / 58 பெங்களூரு சிட்டி - மைசூரு மெமு; 06559 / 60 பெங்களூரு சிட்டி - மைசூரு மெமு ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு, தென்மேற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதை அமைச்சகமும் ஏற்றுக்கொண்டது. இம்மாதம் 15ல் ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, கொடி அசைத்து துவக்கி வைப்பார். 16ம் தேதி முதல் இந்த எட்டு ரயில்களும் அசோகபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இத்தகவல் அறிந்த முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, தனது 'எக்ஸ்' தளத்தில், 'எட்டு ரயில்கள் இங்கிருந்து புறப்படுவதால், ஜே.பி., நகர், வித்யாரண்யபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயனடைவர். இனி அவர்கள் மைசூரு சிட்டி ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, எம்.எல்.ஏ., ஸ்ரீவத்சவ் ஆகியோரின் முயற்சியால் சாத்தியமானது' என குறிப்பிட்டுள்ளார்.

20ல் சிறப்பு ரயில்


பக்தர்கள் வசதிக்காக ரயில் எண் 06219 மைசூரு - உ.பி., மாநிலம் துண்ட்லா விரைவு ரயில், வரும் 20ம் தேதி மைசூரில் இருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு, 23ம் தேதி காலை 9:30 மணிக்கு துண்ட்லாவுக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில், எண் 06220 துண்ட்லா - மைசூரு விரைவு ரயில், துண்ட்லாவில் இருந்து 24ம் தேதி காலை 11:30 மணிக்கு புறப்பட்டு, 26ம் தேதி இரவு 10:00 மணி மைசூரு வந்தடையும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துண்ட்லாவிலிருந்து கும்பமேளா நடக்கும் இடம் பிரக்யாக்ராஜ், 400 கி.மீ., துாரத்தில் உள்ளது.






      Dinamalar
      Follow us