ADDED : நவ 22, 2024 07:22 AM

பெங்களூரு: பெங்களூரில் நடந்த மினி ஒலிம்பிக்ஸ் போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவர் அஜய் பிருத்விராஜ், இரண்டு பரிசுகளை வென்றுள்ளார்.
கர்நாடக விளையாட்டு துறை மற்றும் மாநில ஒலிம்பிக்ஸ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பில், மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்தன. ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மைசூரு நகரின் காயத்ரிபுரத்தில் வசிக்கும் லிங்கராஜு, சங்கீதா தம்பதியின் மகன் அஜய் பிருத்விராஜ், 14.
இவர் ஐடியல் ஜாவா ரோட்டரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் மினி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.
சிறுவர்களுக்கான 400 மீட்டர் மற்றும் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, இரண்டிலும் முதல் பரிசை தட்டி சென்றார்.
ஓட்ட பந்தயத்தில் சாதனை செய்யும் அஜய் பிருத்விராஜ், சர்வதேச அதெலடிக் ரீனா ஜார்ஜிடம் பயிற்சி பெறுகிறார்.