ADDED : மார் 04, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் பணியில் இருந்த போது மாயமான மாலுமியை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
நம் கடற்படைக்கு சொந்தமான கப்பலில், மாலுமி சஹில் வர்மா பணியில் இருந்தார். இவரை, பிப்., 27ம் தேதி முதல் காணவில்லை.
இது குறித்து, சமூக வலைதளத்தில் நம் கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், 'பிப்., 27 முதல் மாலுமி சஹில் வர்மாவை காணவில்லை. அவரை தேடும் பணியில், கடற்படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
'இது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

