கர்நாடக முதல்வரை நெருங்கிய மர்ம நபர்: அதிகாரிகள் திக்… திக்…
கர்நாடக முதல்வரை நெருங்கிய மர்ம நபர்: அதிகாரிகள் திக்… திக்…
ADDED : செப் 15, 2024 02:08 PM

பெங்களூரு: மேடையில் அமர்ந்து இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா அருகில் மர்ம நபர் ஒருவர் நெருங்கிச் சென்றார். உடனடியாக அந்நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தலைநகர் பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகம் அருகே ஜனநாயக தினம் குறித்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. மேடையில் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது போலீசாரின் பாதுகாப்பையும் மீறி மர்ம நபர் ஒருவர் மேடையில் ஏறி முதல்வர் அருகே சென்றார். அவருக்கு சால்வை அணிவிக்க சென்றதாக தெரிகிறது. உடனடியாக அதனை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள், விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் சித்தராமையாவின் விசிறி என்பதும், முதல்வரை பாராட்டும் நோக்கில் சால்வை அணிவிக்க வந்ததும் தெரியவந்துள்ளது. அவரது பெயர் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.