sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்சி ஆதரவு கிடைக்காமல் தடுமாறும் மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா 

/

கட்சி ஆதரவு கிடைக்காமல் தடுமாறும் மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா 

கட்சி ஆதரவு கிடைக்காமல் தடுமாறும் மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா 

கட்சி ஆதரவு கிடைக்காமல் தடுமாறும் மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா 


ADDED : ஜன 03, 2024 07:40 AM

Google News

ADDED : ஜன 03, 2024 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்திரிகையாளராக இருந்து, அரசியல்வாதியாக மாறியவர் மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, அவரை பற்றி கட்டுரை எழுதி, பா.ஜ.,வினர் மனதில் இடம் பிடித்தவர். இதனால் அவருக்கு கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மைசூரு தொகுதியில் போட்டியிட, பா.ஜ., 'சீட்' வழங்கியது.

அந்த நேரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூரில், முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.அதன்பின்னர் 2019 தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் எங்கும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் பேசுபவர் பிரதாப் சிம்ஹா. முதல்வர் சித்தராமையாவையும் சளைக்காமல் விமர்சிப்பவர் என்பதால், அவருக்கு பா.ஜ.,வில் நல்ல மவுசு இருந்தது. ஆனால் சமீபகாலமாக கட்சியில், அவரது மவுசு குறைந்து உள்ளது.

கடந்த மாதம் பார்லிமென்டில் இருவர் அத்துமீறி புகுந்து வண்ண புகைகளை பரவ விட்டனர். அதில் ஒருவர் மைசூரின் மனோரஞ்சன். இவருக்கு பிரதாப் சிம்ஹா தான் பாஸ் கொடுத்து உள்ளார். இதனால் அவரை கண்டித்து நாடு முழுதும், காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அதற்கு சளைக்காத பிரதாப் சிம்ஹா, கட்சியில் இருந்து தனக்கு ஆதரவு கிடைக்கும் என்று அதீத நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால், அவரது நம்பிக்கை பொய் ஆனது. பார்லிமென்ட் நாட்டின் பாதுகாப்பு விஷயம் என்பதால், சொந்த கட்சியினரே அவரை கைவிட்டனர். அவருக்கு ஆதரவாக யாரும் பேசவே இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், இன்னொரு பிரச்னையில் சிக்கி விட்டார்.

அவரது சகோதரர் விக்ரம் சிம்ஹாவை மரம் வெட்டிய வழக்கில், வனத்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்த விஷயத்தில் முதல்வர் சித்தராமையா மீது பிரதாப் சிம்ஹா குற்றம்சாட்டினார்.

அரசியல் ரீதியாக தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக கொந்தளித்தார். ஆனால் இந்த விவகாரத்திலும் கட்சியில் இருந்து, பிரதாப் சிம்ஹாவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவருக்கு கை கொடுக்காமல், கட்சியினர் கையை தட்டி விட்டு உள்ளனர். இதனால் அவர் தடுமாறுகிறார்.

சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட, சில பா.ஜ., தலைவர்கள் சமரச அரசியல் செய்ததாக, பிரதாப் சிம்ஹா குற்றம்சாட்டினார். சொந்த கட்சிக்கு எதிராக கருத்து கூறினார்.

இதனால், தற்போது பிரச்னையில் சிக்கி இருக்கும் அவரை, பா.ஜ., கைவிட்டதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். ஆனால் பிரதாப் சிம்ஹாவோ, வரும் லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us