மைசூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சகோதரர் கொலை
மைசூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சகோதரர் கொலை
ADDED : மார் 10, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரு மாநகராட்சி காங்., முன்னாள் கவுன்சிலர் அயாஜின் சகோதரர் ஆயுதங்களால் தாக்கி, படுகொலை செய்யப்பட்டார்.
மைசூரு சாந்திநகரில் வசித்தவர் அக்மல் பாஷா, 44. நேற்று முன்தினம் இரவு ராஜிவ் நகர் பகுதியில் உள்ள மசூதி முன் ஸ்கூட்டரில் சென்றார்.
ஸ்கூட்டரை மறித்த மர்மநபர்கள், அக்மல் பாஷாவிடம் தகராறு செய்தனர். ஸ்கூட்டரில் இருந்து அவரை கீழே தள்ளி, அரிவாள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பினர்.
பலத்த வெட்டுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார். விசாரணை நடக்கிறது. கொலையான அக்மல் பாஷா, மைசூரு மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் அயாஜின் சகோதரர் ஆவார்.
அக்மலின் கொலையால், சாந்திநகர், ராஜிவ்நகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

