வாக்காளர் பட்டியல் மார்ச் 31 வரை பெயர் சேர்க்கலாம்
வாக்காளர் பட்டியல் மார்ச் 31 வரை பெயர் சேர்க்கலாம்
ADDED : மார் 19, 2024 06:31 AM
பெங்களூரு: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மார்ச் 31ம் தேதி வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் பதிவு செய்யலாம்.
அவர்களின் விண்ணப்பங்கள், ஏப்., 1ம் தேதி சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இதுவரை 50,000 பேர் விண்ணப்பித்து ள்ளனர். அவர்களின் பெயர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், கல்யாண கர்நாடகா, பெங்களூரு நகரங்களில் மிகக் குறைந்த அளவே ஓட்டுப்பதிவு பதிவானது. இத்தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
பெங்களூரு நகரம், கல்யாண் கர்நாடகா மாவட்டங்களில் 30 சதவீதம் குறைவான ஓட்டுப்பதிவு நடந்த 3,000 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இங்குள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

