UPDATED : ஜன 18, 2024 01:00 PM
ADDED : ஜன 18, 2024 12:18 PM

புதுடில்லி: தங்கம் அதிகம் கையிருப்பு வைத்துள்ள நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 800.78 டன் தங்கம் கையிருப்புடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
தங்கத்திற்கு என ஒரு மதிப்பு எப்போதும் உண்டு. இதனால், தங்கத்தை வாங்கி சேமிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல், தங்கத்தை வாங்கி சேமிப்பதிலும் பல நாடுகள் முனைப்பாக உள்ளன. பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், நிதி நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் உதவி செய்வதற்கும் தங்கத்திற்கு ஒரு முக்கிய இடம் உள்ளது.
ஒரு நாட்டின் கரன்சியின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் தங்கம் ஒரு காரணியாக உள்ளது. இதனால், தங்கத்தின் மீது பல நாடுகள் கவனம் இருந்தது. 1970 களில் இந்த நடைமுறை கைவிடப்பட்டாலும், பல நாடுகள் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. பாதுகாப்பான முதலீடாக கருதுவதால், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தங்கம் அதிகம் கையிருப்பு வைத்துள்ள நாடுகள் குறித்த பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது.
இதன் விபரம்
நாடுகள்:( கையிருப்பு தங்கம்)
முதலிடத்தில் அமெரிக்கா (8,133.46 டன் )
2வது இடத்தில் ஜெர்மனி (3,352.65 டன் )
3வது இடத்தில் இத்தாலி ( 2,451.84 டன் )
4வது இடத்தில் பிரான்ஸ்( 2,436.88 டன் )
5வது இடத்தில் ரஷ்யா ( 2,332.74 டன் )
6வது இடத்தில் சீனா (2,191.53 டன்)
7 வது இடத்தில் சுவிட்சர்லாந்து(1,040.00 டன்)
8 வது இடத்தில் ஜப்பான்(845.97 டன்)
9 வது இடத்தில் இந்தியா (800.78 டன்)
10 வது இடத்தில் நெதர்லாந்து(612.45 டன்) நாடுகள் உள்ளன.