மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
ADDED : ஜூன் 23, 2025 01:27 PM

புதுடில்லி: டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு உள்ளது.
நகரங்களுக்குள் குறைந்த துாரம் இயக்கப்படும் ரயில் சேவை மெட்ரோ ரயில் என்றழைக்கப்படும் காரணத்தால், நகரங்களுக்கு இடையிலான நீண்ட துார ரயில் சேவையை வந்தே மெட்ரோ என்பதற்கு பதில், 'நமோ பாரத்' என அழைக்கப்படுகிறது.
டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு உள்ளது. டில்லி, காசியாபாத், மீரட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நமோ பாரத் ரயில் நின்று சென்றது. 82 கி.மீ தூரம் திட்டமிட்டப்படி சோதனை ஓட்டம் நடந்தது என தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சோதனைகளின் போது மீரட் மெட்ரோ ரயில்களும், நமோ பாரத் ரயில்களுடன் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன. டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் - ஆமதாபாத் இடையே முதல் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.