sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா

/

நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா

நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா

நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா


UPDATED : பிப் 09, 2024 03:41 PM

ADDED : பிப் 09, 2024 01:02 PM

Google News

UPDATED : பிப் 09, 2024 03:41 PM ADDED : பிப் 09, 2024 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சரண் சிங் 1979ல் பிரதமராக பொறுப்பேற்றார். 170 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த சரண் சிங், பிறகு, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் ராஜினாமா செய்ய நேரிட்டது. 1987ல் மறைந்தார்.

அதேபோல், 1991-96 காலகட்டத்தில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தார். இவர் வெளியுறவு, பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை போன்ற முக்கிய இலாகாக்களையும் கைவசம் வைத்திருந்தார். இவர் 2004ல் மறைந்தார்.

கடந்த ஆண்டு மறைந்த இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

பிரதமர் மோடி கருத்து


விருது அறிவிக்கப்பட்டவர்கள் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகள்:

Image 1229811எம்.எஸ்.சுவாமிநாதன்: விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் மகத்தான பங்களிப்பை அளித்தவர் சுவாமிநாதன். சவாலான நேரத்தில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவியதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார்.

Image 1229812நரசிம்ம ராவ்: சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவு கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழிநடத்தியது.

Image 1229813சரண் சிங்: நாட்டிற்கு சரண் சிங் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உரிமைகள், நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சரண் சிங். எந்த பதவியில் இருந்தாலும் தேசத்தை கட்டியெழுப்ப சரண் சிங் உத்வேகம் அளித்தார்.






      Dinamalar
      Follow us