ADDED : அக் 06, 2024 11:44 PM
சாம்ராஜ்பேட் : வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு தபால் நிலையத்திற்கு, போதைப் பொருட்கள் இருந்த 626 பார்சல்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டில் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும், பார்சலை பெறும் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தில் வரும் பார்சல்களில், போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் தபால் நிலையத்திற்கு சென்று சோதனை நடத்தினர். கடந்த 2018 முதல் வெளிநாடுகளில் இருந்து வந்த, நிறைய பார்சல்களை யாரும் வாங்காமல் இருந்தனர். அந்த பார்சல்களை பிரித்து சோதனை செய்த போது, எம்.டி.எம்.ஏ., பிரவுன் சுகர், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுபோன்று கடந்த 2018 முதல் தற்போது வரை 26 பார்சல்களில் போதைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று, விசாரணை நடக்கிறது.

