ADDED : ஜன 11, 2024 04:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
ஆனந்த்நாக் மாவட்டம், கனாபல் பகுதியில் தீ விபத்தில் சிக்கியவர்களை சந்திக்க மெகபூபா முப்தி, கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டு இருந்தார். வழியில் சங்கம் என்ற இடத்தில், எதிரே வந்த கார் மீது மோதியது.
இதில், முப்தி சென்ற காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக மெகபூபா முப்தி காயமின்றி தப்பினார். காரில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

