ADDED : ஏப் 29, 2026 01:56 AM

அரசின் தோல்வி! மேற்கு வங்கத்தில் தான் முதல்வராக உள்ளதால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம் இருந்து ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதல்வர் மம்தா கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இது, ஆபத்தான, பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதத் தன்மை கொண்ட கருத்து. அவரது அரசு நிர்வாகத்தின் முழு தோல்வியாகும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,
விசாரிக்க வேண்டும்! பள்ளிகளில் சிறுமியருக்கு, தரமற்ற சானிட்டரி நாப்கின்கள் வினியோகிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் பா.ஜ., அரசு ஊழல் செய்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்தர சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அசோக் கெலாட் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்
ஏன் நெருக்கடி?
ஆந்திராவில், 3,000 பெட்ரோல் பங்கில் இருப்பு இல்லை என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பிற பகுதிகளில் இல்லாத நெருக்கடி, ஏன் இங்கு மட்டும் உள்ளது. இதுதான் ஆந்திர மக்கள் மீது மத்திய அரசு காட்டும் உறுதியான நிலைப்பாடா? இது, நம் மாநிலத்தின் மீது பா.ஜ., காட்டும் அலட்சியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஷர்மிளா ஆந்திர மாநில காங்., தலைவர்
