ADDED : நவ 11, 2026 08:49 PM

சூப்பர் பிரதமர்!
பிரதமர் பதவியை ஏற்காததை, மிகப்பெரிய தியாகம் என தன் சுயசரிதை புத்தகத்தில் காங்., மூத்த தலைவர் சோனியா குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒரு ‘சூப்பர் பிரதமர்’ ஆகவே இந்தத் தியாகத்தை அவர் மேற்கொண்டார். அதற்கு பதிலாக, அமைச்சரவை அந்தஸ்து கொண்ட பதவி வகித்தார். இதுபோன்ற ஒரு தியாகத்தை உலகில் வேறெங்கும் காண முடியாது.
- சுதான்ஷு திரிவேதி
தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,
விரைவில் விலகல்?
தேசியவாத காங்., கட்சியின் மறைந்த தலைவர் அஜித் பவாரின் கட்டுப்பாட்டில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர். எனவே, அதிருப்தியில் உள்ள அவர்களில், 22 எம்.எல்.ஏ.,க்கள் விரைவில் விலகக்கூடும். அவர்கள் தங்கள் தாய் அமைப்பான சரத்பவார் பிரிவுக்கு திரும்பினால், அதை இணைப்பாக கருத முடியாது.
- சஞ்சய் ராவத்
ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா பிரிவு
திருப்திப்படுத்தும் அரசியல்!
காங்கிரஸ் எம்.பி., ராகுலை திருப்திபடுத்துவதற்காகவே, பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக எத்தனால் கலக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கர்நாடகாவில் எரிபொருள் பரிசோதனை முறையில் குறைபாடுகள் உள்ளன. மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்தும், காங்., அரசு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
- பிரகலாத் ஜோஷி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
