பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
UPDATED : மே 08, 2025 11:55 AM
ADDED : மே 08, 2025 11:45 AM

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
நேற்று அதிகாலையில், 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் நம் படையினர் துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன. இதனால் ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையோரத்தில் பூஞ்ச், பாரமுல்லா, குப்வாரா, ஜம்மு, சம்பா, கத்துவா, ரஜோரி மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. ஸ்ரீநகர் விமான நிலையத்தையொட்டிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன.
இதுபோல, காஷ்மீர் பல்கலையின் அனைத்து தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் அவர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.