
புற்றுநோய் தடுப்பூசி!
பெண்களை பாதிக்கும் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கான தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இது இன்னும் ஆறு மாதங்களில் மக்களுக்கு கிடைக்கும். ஒன்பது முதல் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த தடுப்பூசி போட தகுதியுடையவர்கள்.
பிரதாப்ராவ் ஜாதவ்
மத்திய இணை அமைச்சர்,
பா.ஜ.,
இது கும்பமேளாவா?
மஹா கும்பமேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது. நான் கும்பமேளாவை மதிக்கிறேன், புனித கங்கை மாதாவையும் மதிக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எந்த திட்டமிடலும் இல்லை. வி.ஐ.பி.,க்களுக்கு கூடாரம் அமைத்து சகல வசதிகள் செய்து கொடுத்த அரசு, ஏழைகளுக்கு எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
செயல்பாட்டுக்கு வந்த சட்டங்கள்!
ஜம்மு - காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் வெற்றிகர மாக செயல்படுத்தப்பட்டுள்ளன. புதிய சட்டங்களின் விதிகள் குறித்து குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். சட்டத்தில் உள்ள குறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விவாதித்தேன்.
ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர்,
தேசிய மாநாட்டு கட்சி

