தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தேசியம்: பலவீனப்படுத்துகிறது!

 தேசியம்: பலவீனப்படுத்துகிறது!

 தேசியம்: பலவீனப்படுத்துகிறது!


ADDED : மே 20, 2026 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 11:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பலவீனப்படுத்துகிறது!

உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., அரசு இட ஒதுக்கீடு முறையை பலவீனப்படுத்துகிறது. அரசியலமைப்பு உரிமைகளை பெறுவதற்கு கூட மக்கள் நீதிமன்றங்களை நாட வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது . இட ஒதுக்கீடு என்பது பாதுகாப்பு. இது, சமூக ஒருங்கிணைப்புக்கான ஒரு கருவியும், ஊடகமும் ஆகும்.

அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி

பா.ஜ., ஆட்சியை இழக்கும்!

மேற்கு வங்க பா.ஜ., அரசு, சிறுபான்மையினரை குறிவைத்து துன்புறுத்துகிறது. சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக் கூறி சாலையோர வியாபாரிகளின் கடைகள் புல்டோசரால் இடிக்கப்படுகின்றன. இந்த அராஜக போக்குக்கு மக்கள் முடிவு கட்டுவர். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரைவில் பா.ஜ., அகற்றப்படும்.

மம்தா பானர்ஜி தலைவர், திரிணமுல் காங்., கட்சி

உறுதி செய்ய வேண்டும்!

நாட்டில், வரும் காலங்களில் யூரியா மற்றும் பிற உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இதனால், மத்திய - மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு போதிய அளவு உரம் கிடைப்பதையும் அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

அசோக் கெலாட் மூத்த தலைவர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us