sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

/

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி

4


ADDED : பிப் 09, 2026 04:34 PM

Google News

4

ADDED : பிப் 09, 2026 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இருமல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, இன்று புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்து வருகிறார். இவருக்கு வயது 85. இன்று இருமல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்கு பின் மேல் சிகிச்சை குறித்து முடிவு எடுக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகள் சுப்ரியா சுலே மருத்துவமனையில் உடன் உள்ளார்.

சரத் பவாருக்கு நேற்று இரவு முதல் தொடர்ந்து இருமல் இருந்ததாகவும், மார்பு நெரிசல் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்க புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

வாய்வழிப் புற்றுநோயிலிருந்து தப்பியவர் சரத் பவார். அவர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். சமீபகாலமாக உடல் நல குறைவு காரணமாக, பெரும்பாலான கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சரத் பவார் வீட்டில் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us