ADDED : அக் 25, 2026 02:32 PM

தேசத்துக்கு எதிரானது!
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக போராடி கொலை செய்யப்பட்ட பர்விந்தர் சிங் ஜோட்டா குடும்பத்தினருக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு பாதுகாப்பு வழங்காமல், அவர்களை துன்புறுத்துகிறது. இந்த அரசு பஞ்சாப் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கும் எதிரானது என்பது நிரூபணமாகியுள்ளது.
- சுக்பீர் சிங் பாதல்
தலைவர், சிரோமணி அகாலி தளம் கட்சி
ஒப்பிட முடியாது!
ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதையே இந்தியா விரும்புகிறது. வெளிநாடுகளில் நடந்த வன்முறை புரட்சிகளை, இங்கு நடக்கும் அமைதியான போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. இதில், நடந்த வன்முறை சம்பவங்களுக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம். நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கும் அவைதான் காரணம்.
- கபில் சிபல்
ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,
சீர்குலைக்க முயற்சி!
உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள்முதலே, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். வேட்புமனு தாக்கலின்போது, வன்முறையை தூண்டி குற்றச்செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டனர். மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, உள்ளாட்சி தேர்தலை அக்கட்சியினர் சீர்குலைக்க முயல்கின்றனர்.
- சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சி
