ADDED : ஏப் 28, 2026 01:13 AM

பணம் தந்தால் வாங்குங்க! தேர்தலில் தங்களுக்கு ஓட்டளிக்க மக்களுக்கு பணத்தை பா.ஜ., வாரி இறைக்கிறது. மேற்கு வங்க மக்களே, இது உங்களுக்கு சேர வேண்டிய பணம்; உங்கள் பணம். மத்திய அரசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிதி. எனவே, அவற்றை வாங்கி கொள்ளுங் கள். ஆனால், திரிணமுல் காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள். அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ் கட்சி
பாதுகாப்பு தொடரும்! மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்னும், வன்முறை சம்பவங்கள் அதிகம் நடப்பது வாடிக்கையான ஒன்று. அவற்றைத் தடுக்கும் வகையில், சட்டசபை தேர்தல் முடிந்த பின்னும், மேலும் ஒரு வாரத்துக்கு மத்திய பாதுகாப்பு படையினர் இங்கு பாதுகாப்பு பணியில் இருப்பர். அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
பாடம் புகட்டுவர்! சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்., பணி வாயிலாக, மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பெரிய முறைகேட்டில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதனால், 90 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, அக்கட்சிக்கு அங்குள்ள மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவர். அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி கட்சி
